பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ட்ரைஃபெட் கைவினைக் கலைஞர்கள் / சுயஉதவிக் குழுக்கள், வன தான் திட்டப் பயனாளிகள் & தொண்டு நிறுவனங்கள் தயாரித்த முகக்கவசங்களை ட்ரைஃபெட் விநியோகிக்கிறது

Posted On: 11 APR 2020 2:47PM by PIB Chennai

பழங்குடியினர் நலஅமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியின கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பானது (TRIFED) பழங்குடியின கைவினைக் கலைஞர்கள், சுயஉதவிக் குழுக்கள் (SHGs), வன தான் திட்டப் பயனாளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறது. அவர்கள் தயாரிக்கும் கைத்தறிப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் இயற்கை விளைபொருட்களை விற்பதற்கான உதவிகளை ட்ரைஃபெட் வழங்கி வருகிறது. 

தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் இந்தப் பொருட்களை தயாரிப்பவர்களில் சிலர் தங்களது வீடுகளில் முகக்கவசங்களை தயாரிக்கத் தொடங்கி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து தங்களையும் தங்கள் சமுதாய மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்கள் முகக்கவசங்களைத் தயாரிக்கின்றனர்.  சிலர் இவற்றை உள்ளூர் நிர்வாகத்துக்கும் வழங்குகின்றனர். தங்களது தயாரிப்பு திறன் மற்றும் விலைக்கேற்ப முகக்கவசங்களை விநியோகிப்பதன் மூலம் அரசுக்கு உதவி செய்யும் தங்களது விருப்பத்தை இவர்கள் தெரிவித்து உள்ளனர். இவற்றை இவர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளிலேயே தயாரிக்கின்றனர்.  இவர்கள் தயாரிக்கும் முகக்கவசங்களை விற்பது என்பது அவர்களுக்கான வாழ்வாதார ஈட்டலுக்கான ஒரு மாதிரியாகவும் அவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.  தற்போதைய நெருக்கடி காலகட்டத்தில் முகக்கவசங்களை விநியோகிக்கக் கூடிய கூடுதல் விநியோகஸ்தர்களை கண்டறிய ட்ரைஃபெட் முயன்று வருகிறது.

*******



(Release ID: 1613378) Visitor Counter : 177