உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
தனியார் விமானப் போக்குவரத்து விமானங்கள் மூலமாக 2675 டன் உள்நாட்டு மருத்துவப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட உதான் உயிர்காக்கும் விமானங்கள், ஒரு லட்சத்து 66 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றன.
Posted On:
10 APR 2020 5:34PM by PIB Chennai
கோவிட் 19 ஊரடங்கு காலத்தின்போ,து 180க்கும் அதிகமான உயிர்காக்கும் உதான் விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றுள் 114 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் – ஆல் இயக்கப்பட்டவை. 58 விமானங்கள் இந்திய விமானப் படையால் இயக்கப்பட்டவை.
கிலோமீட்டர் மொத்தம்: ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 76 கிலோமீட்டர்.
9.4.2020 அன்று எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் 10.22 டன்.
9.4.2020 வரை எடுத்துச் செல்லப்பட்ட மொத்த சரக்கு 248.02 + 10.22 = 258.24 டன்.
9, ஏப்ரல் 2020 அன்று, ஏர்-இந்தியா, ஷங்காயிலிருந்து 21.77 டன் மருத்துவப் பொருள்களைக் கொண்டு வந்தது. தேவைக்கேற்ப, மிக முக்கிய மருத்துவ சாதனங்களை எடுத்து வருவதற்காக, மற்ற நாடுகளுக்கும், இதற்கென சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.
(Release ID: 1613051)
Visitor Counter : 136
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada