ரெயில்வே அமைச்சகம்

உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட 4.50 லட்சம் பெட்டிகள் உட்பட, தோராயமாக 6.75 லட்சம் பெட்டிகளில் பொருள்களை மார்ச் 23 முதல் ரயில்வே அனுப்பியது

Posted On: 10 APR 2020 4:56PM by PIB Chennai

உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட 4.50 லட்சம் பெட்டிகள் உட்பட, தோராயமாக 6.75 லட்சம் பெட்டிகளில் பொருள்களை மார்ச் 23 முதல் ரயில்வே அனுப்பியது.

 

2 ஏப்ரல் முதல், 8 ஏப்ரல், 2020 வரையிலான வாரத்தில், 258503 பெட்டிகளில் பொருள்களை ரயில்வே எடுத்துச் சென்றது. இதில் 155512 பெட்டிகள் அத்தியாவசியப் பொருள்களை உள்ளடக்கியதாகும். இதில் 21247 பெட்டிகளில் உணவு தானியங்கள், 11336 பெட்டிகளில் உரங்கள், 124759 பெட்டிகளில் நிலக்கரி, மற்றும் 7665 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் அடங்கும்.

 

கொவிட்-19 பொது முடக்கக் காலத்தில் இந்திய உணவுக் கழகத்துடனும் நெருங்கி பணியாற்றிவரும் ரயில்வே, 800 அடுக்குகளில் 20 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்களை 24 மார்ச் முதல் நாடு முழுவதும் எடுத்துச் சென்றுள்ளது. நாடு முழுவதும் விநியோகத்தை அதிகரித்து, கோதுமை மற்றும் அரிசியை பெரும்பாலும் ரயில் மூலம் எடுத்து செல்வதன் மூலம், அதிகரித்துள்ள தேவையை இந்திய உணவுக் கழகம் சமாளித்து வருகிறது.

 

அழுகக் கூடிய தோட்டக் கலைப் பொருள்கள், விதைகள், பால் மற்றும் பால் பொருள்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக, 109 அட்டவணையிடப்பட்ட சரக்கு ரயில்களை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தின் ஆரம்பத்திலிருந்து, தோராயமாக 59 பாதைகளில் (109 ரயில்கள்), பார்சல் ரயில்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மற்றும் அழுகக்கூடிய பொருள்களின் வேகமான போக்குவரத்துக்காக, ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களும் இதன் மூலம் இணைக்கப்படும்.

 

***


(Release ID: 1613021)