உள்துறை அமைச்சகம்
கோவிட்-19 நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிப்பை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல். எந்த சமூக / மத கூட்டங்கள் / ஊர்வலங்களுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்
Posted On:
10 APR 2020 3:58PM by PIB Chennai
2020 ஏப்ரல் மாதத்தில் திருவிழாக்கள் வரும் நிலையில், கோவிட்-19 நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிப்பை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எந்த சமூக / மத கூட்டங்கள் / ஊர்வலங்களுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறித்த தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளவாறு, ஊரடங்கு குறித்த விதிகளை அமல் செய்யும் கள ஏஜென்சிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, அமைதி மற்றும் பொது நல்லிணக்கத்தைப் பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை / தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. ஆட்சேபகரமான விஷயங்கள் எதுவும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்தில் உள்ளவர்கள், சமூக / மத அமைப்புகள் மற்றும் குடிமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, இதுகுறித்த விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் விரிவாக சுற்றுக்கு விடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முடக்கநிலை கட்டுப்பாடுகள் எதுவும் மீறப்பட்டால், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான பொருத்தமான தண்டனை விதிகளின் கீழ், சட்ட அமலாக்க ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறித்த தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கோவிட்-19 நோய் தாக்காமல் தடுப்பதில், அமைச்சகங்கள், இந்திய அரசுத் துறைகள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அதிகாரவர்க்கத்தினரால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்துறை அமைச்ககத்தின் 24.03.2020 தேதியிட்ட மற்றும் 25.03.2020, 27.03.2020, 02.04.2020 மற்றும் 03.04.2020 தேதிகளில் மாற்றப்பட்ட அறிக்கைகளின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பிரிவு 9 & 10-ன்படி, எந்த விதிவிலக்கும் இல்லாமல், எந்த மத கூட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படக் கூடாது. மேலும், அனைத்து சமூக / கலாச்சார / மத நிகழ்வுகள் / கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
(Release ID: 1613019)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam