பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பழங்குடியின நலத்துறை அமைச்சகம் தங்கள் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக சுய உதவிக்குழு தன்னார்வலர்களுக்கு இணையதளம் மூலம் டிஜிட்டல் பிரச்சாரம்

Posted On: 09 APR 2020 8:05PM by PIB Chennai

 

கோவிட் தொற்று நோயை எதிர்க்கொள்ள எடுக்க வேண்டிய முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக எடுப்பது குறித்து இணையதளம் மூலம் தன்னார்வலர்களுக்கும், சுய உதவிக்குழுவினருக்கும் புதிய ஆன்லைன் பயிற்சியை பழங்குடியின நலத்துறை இன்று தொடங்கியது.  இது 27 மாநிலங்களிலும் உள்ள பழங்குடியினப் பகுதிகளை உள்ளடக்கியது என்பதுடன், 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பழங்குடி மக்களுக்கு தங்கள் பணியை பாதுகாப்பாக மேற்கொள்வதை உறுதி செய்வதற்காகவும், இந்த வேலையில் ஈடுபட்டுள்ள சுய உதவிக்குழுக்களின் டிஜிட்டல் பிரச்சாரத்தை ஊக்குவித்து, டிஜிட்டல் தகவல் தொடர்பை உருவாக்குவதற்காகவும் பழங்குடியின நலத்துறை யூனிசெஃப் மற்றும் உலக சுகாதாரத்துறை  இணைந்து இதனை மேற்கொள்கிறது. சமூக விலகலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தின் திரு. பிரவீர் கிருஷ்ணா, ஐம்பது லட்சம் பழங்குடியின குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தின் இலக்கு என்று தெரிவித்தார்.



(Release ID: 1612835) Visitor Counter : 133