குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கொவிட்-19 தொடர்பான மருத்துவப் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: திரு. நிதின் கட்கரி

Posted On: 09 APR 2020 9:07PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் தொற்று நோயின் பாதிப்பை எதிர்கொள்ள அரசு எந்திரத்தின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சர், திரு. நிதின் கட்கரி, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார்.

கொவிட்-19 காராணமாக, வென்டிலேட்டர், தனிநபர் பாதுகாப்பு உபகரணப் பெட்டிகள், முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி போன்ற மருத்துவப் பொருள்களுக்கான தேவை கடந்த ஒரு மாதத்தில் திடீரென அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இந்தப் பொருள்களின் தயாரிப்பை அதிகப்படுத்தி தேவையை பூர்த்தி செய்வதில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும் என்று அவர் கூறினார். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் தொழில்நுட்ப மையங்களின் சார்பாக, அவை கிருமி நாசினி, முகக் கவசங்கள், அங்கிகள், முகப் பாதுகாப்புப் பொருள்கள் மற்றும் மருத்துவமனை அறைகலன்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1612800) Visitor Counter : 159