பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES) ரூ.28.80 கோடி அளித்துள்ளன.
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 APR 2020 9:21AM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES) ரூ.28.80 கோடி அளிக்க முன்வந்துள்ளன. இந்த அமைப்புகள் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் நிபுணர்களின் அமைப்புகளாக உள்ளன. கோவிட்-19  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிக்கு இத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிவாரணம் வழங்கும் நோக்கில், அவசர சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (PM CARES Fund) 2020 மார்ச் 28 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்துக்கான இந்த நிதி, கோவிட்-19 நோய்த் தொற்றால் உருவாகும் எந்த ஒரு அவசர நிலை அல்லது துயரமான சூழ்நிலையையும் சமாளித்தல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
நன்கொடைகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது (ரூ. கோடியில்):
	
		
			| 
			  வ. எண் 
			 | 
			
			 அமைப்பு 
			 | 
			
			 அமைப்பின் பங்களிப்பு 
			 | 
			
			 உறுப்பினர்கள் / அலுவலர் பங்களிப்பு 
			 | 
			
			 மொத்தம் 
			 | 
		
		
			| 
			 1 
			 | 
			
			 இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் 
			 | 
			
			 15.00 
			 | 
			
			 6.00 
			 | 
			
			 21.00 
			 | 
		
		
			| 
			 2 
			 | 
			
			 இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் 
			 | 
			
			 5.00 
			 | 
			
			 0.25 
			 | 
			
			 5.25 
			 | 
		
		
			| 
			 3 
			 | 
			
			 இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் 
			 | 
			
			 2.50 
			 | 
			
			 0.05 
			 | 
			
			 2.55 
			  
			 | 
		
		
			| 
			   
			 | 
			
			 மொத்தம் 
			 | 
			
			 22.50 
			 | 
			
			 6.30 
			 | 
			
			 28.80 
			 | 
		
	
 
                
                
                
                
                
                (Release ID: 1612794)
                Visitor Counter : 219