பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

அசாதாரணமான பொதுக் குழு கூட்டங்களை (EGM) காணொலிக் காட்சி மூலம் அல்லது மின்னணு வாக்களித்தல் வசதி / பதிவு செய்த மின்னஞ்சல் மூலம் எளிமையான வாக்களிப்பு அம்சத்துடன் கூடிய OAVM மூலம் நடத்த மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி

Posted On: 08 APR 2020 7:58PM by PIB Chennai

நிறுவனங்களின் பங்குதாரர்கள் பொதுவான ஓர் இடத்தில் நேரடியாக கூட வேண்டிய அவசியம் இல்லாமல், அசாதாரணமான பொதுக் குழு கூட்டங்களை (EGM) காணொலிக் காட்சி மூலம் அல்லது மின்னணு வாக்களித்தல் வசதி / பதிவு செய்த மின்னஞ்சல் மூலம் எளிமையான வாக்களிப்பு அம்சத்துடன் கூடிய OAVM மூலம் நடத்துவதற்கு மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

08.04.2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020-ன்படி, கம்பெனிகள் சட்டம் 2013ன் கீழ் மின்னணு வாக்களிப்பு வசதியை அளிக்க வேண்டிய பட்டியலிடப்பட்ட கம்பெனிகள் அல்லது 1000 அல்லது அதற்கு அதிகமான பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் விவகாரத் துறை இந்த அனுமதியை அளித்துள்ளது. மற்ற கம்பெனிகளைப் பொருத்த வரையில், பதிவு செய்துள்ள மின்னஞ்சல்கள் மூலமாக எளிமையான முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிகளை எளிதாக பூர்த்தி செய்வதற்காக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் 08 தேதியிட்ட அமைச்சகத்தின் சுற்றறிக்கையை பின்வரும் இணையதளத்தில் காணலாம் :

http://www.mca.gov.in/Ministry/pdf/Circular14_08042020.pdf

 

***********



(Release ID: 1612600) Visitor Counter : 153