பிரதமர் அலுவலகம்

இந்திய அமெரிக்க நட்புறவு முன்பு இருந்ததை விட மேம்பட்டு உள்ளது என்று பிரதம மந்திரி தகவல்

Posted On: 09 APR 2020 10:51AM by PIB Chennai
முன்பு இருந்ததைவிட இந்திய அமெரிக்க நட்புறவு மேம்பட்டுள்ளது என்று பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி இன்று தெரிவித்து உள்ளார். கோவிட்-19க்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஹைட்ராக்ஸி குளோரா குயின் மருந்தை அனுப்ப இந்தியா எடுத்துள்ள முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் செய்தியில் நன்றி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் திரு.மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இத்தகைய காலகட்டம் நண்பர்களை நெருங்கி வரச் செய்கிறது. இந்திய - அமெரிக்க நட்புறவு முன்பை விட மேலும் வலுப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்” என்று அமெரிக்க அதிபருக்கு பதில் அளிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.

(Release ID: 1612447) Visitor Counter : 212