வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கொவிட்-19: பொலிவுறு நகரங்களில் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து பெருநகர நிர்வாகங்கள் பணியாற்றுகின்றன
Posted On:
07 APR 2020 1:57PM by PIB Chennai
பொலிவுறு நகரங்களில் கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக சந்தேகப்படும் நபர்களைக் கண்காணிப்பதில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் பெருநகர நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன. சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி நகரங்கள் வெப்ப வரைபடங்கள் என்ற தகவல்-தரவுக்காட்சி மூலமாக முன்கூட்டியே அனுமானிக்கும் பகுப்பாய்வை உருவாக்கி இதற்கு பயன்படுத்துகின்றன. நோயாளிகளின் நகர்வை கண்காணித்தல் (புவி-மதில் என்ற இடக்கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்தி) மற்றும் சந்தேகப்படும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை அடிக்கடி கண்காணித்தல் ஆகியவற்றையும் மேற்கொள்கின்றன.
சென்னையில், 25 மருத்துவர்கள் ஐ.சி.சி.சி (ICCC) பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிமை கண்காணிப்பில் உள்ள 250 நபர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தார்மீக மற்றும் உளவியல்ரீதியான உதவியை மருத்துவர்கள் வழங்குவதோடு, தேவைப்பட்டால் முக்கியமான மருந்துகளையும் அவர்களுக்கு பரிந்துரைக்கின்றனர். வேலூரில் நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகப்படும் 118 நபர்கள் ஆலோசனைகள் பெறுவதற்காக தனித்தனி சுகாதார நிபுணர்களுடன் இணைக்கப்பட்டு அவர்களின் தொடர்பு முகவரிகள் மற்றும் இதுவரையிலான மருத்துவச் சிகிச்சை குறித்த விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகப்படும் நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் தரப்படுகின்றன.
(Release ID: 1611975)
Visitor Counter : 180
Read this release in:
Telugu
,
English
,
Kannada
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati