உள்துறை அமைச்சகம்

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை நாடு முழுவதும் தடையின்றியும், எளிதாகவும் விநியோகிக்க சிறப்பு கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

Posted On: 06 APR 2020 5:47PM by PIB Chennai

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் எளிதாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் ஒரு அம்சமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் திரு.அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், தடையின்றியும், எளிதாகவும் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் செய்ய சிறப்புக் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், நாட்டில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை போதுமான அளவில் விநியோகிக்கச் செய்வது மிகவும் அவசியமானது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள் குறித்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய பட்டியலில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சூழலை கருத்தில் கொண்டு, ஊரடங்குக்கான ஒருங்கிணைந்த வழிமுறைகளின் பல்வேறு பிரிவுகளில் உள்ள விலக்குகள் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 

  • மருத்துவ ஆக்சிஜன் வாயு/திரவம், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான கிரியோஜெனிக் டேங்க்குகள், திரவ கிரியோஜெனிக் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் கிரியோஜெனிக் எடுத்துச்செல்வதற்கான டேங்க்குகள், அனைத்துப் பகுதிகளிலும் ஆவியாக்குபவை மற்றும் கிரியோஜெனிக் வால்வுகள், சிலிண்டர் வால்வுகள் மற்றும் அதன் பொருட்கள் ஆகிய அனைத்தையும் உற்பத்தி செய்யும் பிரிவுகள்;
  • மேற்குறிப்பிட்ட பொருட்களை எடுத்துச் செல்தல்;
  • மேற்குறிப்பிட்ட பொருட்களை நில எல்லைப் பகுதிகளை தாண்டி எடுத்துச் செல்வது;

மேற்குறிப்பிட்ட உற்பத்திப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்/ தொழிற்சாலைகள் முழு திறனுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தொழிலாளர்கள், தங்களது வீடுகளிலிருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லவும், வீட்டுக்கு திரும்பி வரவும் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்



(Release ID: 1611887) Visitor Counter : 229