சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தேசிய பூங்காக்கள் / சரணாலயங்கள்/ புலிகள் காப்பகங்களில் கொவிட்-19 தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த அறிவுறுத்தல்

Posted On: 06 APR 2020 7:17PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 பரவலையும், நியூயார்க்கில் புலி ஒன்று கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டது தொடர்பான ஒரு செய்தியையும் கருத்தில் கொண்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. தேசிய பூங்காக்கள்/ சரணாலயங்கள்/ புலிகள் காப்பங்களில் உள்ள விலங்குகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாலும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் வைரஸ் பரவவாய்ப்புகள் உள்ளதாலும், தேசிய பூங்காக்கள்/ சரணாலயங்கள்/ புலிகள் காப்பங்களில் கொவிட்-19 தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து இந்தஅறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

***(Release ID: 1611882) Visitor Counter : 82