ரெயில்வே அமைச்சகம்

புதிதாக அமைக்கப்பட்ட இந்திய ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் விரைவாக தகவல்களை வழங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2020 2:07PM by PIB Chennai

தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வண்ணம் இந்திய ரயில்வே துறை ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்தைத் திறந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த வசதி தொடங்கப்பட்டதிலிருந்து, இது ஒரு பெரிய நிர்வாக வெற்றியாக மாறியுள்ளது. இதனால் நியமிக்கப்பட்ட தகவல் தொடர்பு தளங்களில், ரயில்வே பணியாளர்கள் 1,25,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் 10 நாட்களில் பதிலளித்திருக்கிறார்கள் (தேசிய முடக்க காலத்தில் கூட) அதில் 87% (1,09,000க்கும் அதிகமானவை) தொலைபேசியில் நேரடி தொடர்புகள் மூலம் கையாளப்பட்டது.

ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் நான்கு தகவல் தொடர்பு மற்றும் பின்னூட்ட தளங்களை இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கிறது. உதவி மைய எண்கள் 139, 138, சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் (railmadad@rb.railnet.gov.in).  இது தகவல் மற்றும் பரிந்துரைகளை தங்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்கிறது.

தேசிய முடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 10 நாட்களில் 80,000 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு உதவி மைய எண் 139 அதன்  ஐவிஆர்எஸ் வசதியால் ஒன்றுக்கு ஒன்று (one-on-one basis) அடிப்படையில் பதிலளித்தது. பெரும்பால விசாரணைகள் ரயில் சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தொடர்பாகவும், தங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவது தொடர்பாகவும் இருந்தன.

உதவி மைய எண் 138 இல் பெறப்பட்ட அழைப்புகள் அழைப்பவரின் இருப்பிடத்தின் படி அருகிலுள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு (உள்ளூர் மொழி மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை நன்கு அறிந்த ரயில்வே பணியாளர்கள் கொண்ட அலுவலகம்) சென்று சேரும். அழைப்பாளர்கள் தாங்கள் வசதியாக பேசும் மொழியில் தகவலையும் வழிகாட்டலையும் பெறுவதை இது உறுதி செய்கிறது. இந்த புதிய அம்சம் மொழித் தடையைத் தாண்டி தகவல்களை விரைவாகப் பெறுவதால், ரயில்வே வாடிக்கையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருத்தமான தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன.

•••••••••••••••


(வெளியீட்டு அடையாள எண்: 1611874) வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada