நிலக்கரி அமைச்சகம்

இந்திய நிலக்கரி துணை நிறுவனம் கோவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்க புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கு நிதிஉதவி : பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 06 APR 2020 2:31PM by PIB Chennai

"மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், கோவிட் -19  தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புவனேஸ்வரில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய மருத்துவமனையின் அனைத்து செலவுகளுக்கும் நிதியளிக்கும். நோயாளிகளின் சிகிச்சை செலவு உள்ளிட்ட செலவுகளுக்காக ஏற்கனவே ரூ.7.31 கோடியை அந்நிறுவனம் உடனடியாக முன்கூட்டியே அளித்தது. காணொளி காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனையின் தொடக்க நிகழ்ச்சியின் போது, ”ஒடிசா மக்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு சிறந்த மருத்துவ சொத்துஎன்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.

இந்தியா நிலக்கரி துணை நிறுவனமான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் 500 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களுடன் கூடிய 25 தீவிர சிகிச்சை பிரிவு (I.C.U) கொண்ட மருத்துவமனையின் மொத்த செயல்பாடுகளுக்கும் நிதியுதவி செய்கிறது. ஒடிசாவின் முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக் இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ஒடிசா அரசு இந்த மருத்துவமனையை புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. மத்திய பெட்ரோலிய  இயற்கை எரிவாயு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராட மாவட்ட மினரல் ஃபண்டுடன் (DMF) கிடைக்கும் நிதியில் 30% வரை மாநில அரசுகள் பயன்படுத்த மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்று திரு. பிரல்ஹாத் ஜோஷி கூறினார். மேலும், ஒடிசா போன்ற கனிம வளமான மாநிலத்திற்கு தொற்று நோயை எதிர்த்து போரிட இந்த நிதியுதவி உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்திய நிலக்கரி துணை நிறுவனங்கள் எட்டு மாநிலங்களில் 1500க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை அமைத்துள்ளன. இதேபோல், புவனேஸ்வர் தலைநகரின் அமைந்துள்ள தேசிய அலுமினிய நிறுவன (NALCO) ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பள தொகையான ரூ2.5 கோடியை ஒடிசா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. கோராபுட் மாவட்டத்தில் ஒடிசா அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைக்கு நிதியளிப்பதற்கும் தேசிய அலுமினிய நிறுவனம்) ஒப்புதல் அளித்துள்ளது.

•••••••••••••••



(Release ID: 1611873) Visitor Counter : 150