அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் உற்பத்தியைப் பெருக்க வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்ட நேனோ பூச்சு மற்றும் நேனோ அடிப்படையிலான பொருட்களை உருவாக்கும் குறுகிய கால திட்டங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை அழைப்பு

Posted On: 06 APR 2020 3:23PM by PIB Chennai

 

 

வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்ட நேனோ பூச்சு மற்றும் நேனோ அடிப்படையிலான பொருட்களை உருவாக்கும் குறுகிய கால திட்டங்களுக்கு, அறிவியல் மற்றும் பொறியியல் வாரியம் (SERB) மூலமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை அழைப்பு விடுத்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உடை (PPE) போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தை அளிக்கலாம். இதை பங்கேற்பு தொழிற்சாலை அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அளித்து அதிக அளவில் உற்பத்தி செய்யலாம் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில், உருவாகிவரும் சுகாதாரத் துறை தேவைகளை சமாளிக்க பெருமளவு பங்களிப்பு செய்வதாக இந்த நேனோ பூச்சுகள் அமையும்.

கொவிட்-19-க்கு எதிரான மூன்றடுக்கு மருத்துவ மாஸ்க்குகள் மற்றும் N-95 சுவாச கவசம் அல்லது சிறந்த செயல்திறன் உள்ள மாஸ்க்குகளை பெருமளவில் தயாரித்தல், முழு உடல் கவச உடைகளை பெருமளவு தயாரித்தல் மற்றும் கொவிட்-19 தாக்குதலுக்கு எதிராகப் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வரும் திட்டம் முதலில் பரிசீலிக்கப்படும் என்ற அடிப்படையில், செயலாக்கத்தன்மை, திட்டத்தின் வாய்ப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து, பிறகு நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். இதில் உருவாக்கப்பட்டு தொழில் துறைக்கு அளிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நேனோ பூச்சு அடிப்படையிலான பொருட்கள் தயாரிப்பில் தரத்தை உறுதி செய்வதற்கு, பொருத்தமான இந்தியத் தரநிலைகளை உருவாக்குவதில் உதவிகரமாக இருப்பவையாகவும் இருக்க வேண்டும். இதற்கான திட்டங்களை 2020 ஏப்ரல் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

{திட்டங்களுக்கான அழைப்புகள் குறித்த விவரங்களை அறிய : www.serbonline.in

ஒருங்கிணைப்பு விஞ்ஞானிகளின் தொடர்புக்கான தகவல்கள்-

 

  1. டாக்டர் டி. தங்கராஜு, விஞ்ஞானி E, SERB, இமெயில்: ttradjou@serb.gov.in

டாக்டர் நாகபூபதி மோகன், விஞ்ஞானி  C, DST இமெயில்: boopathy.m[at]gov[dot]in

  1. திரு. ராஜீவ் கன்னா, விஞ்ஞானி C, DST இமெயில்: Khanna.rk[at]nic[dot]in

மேலும் தொடர்புகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்-

டாக்டர் மிலிந்த் குல்கர்னி, விஞ்ஞானி- G & Head, Nano Mission, DST

இமெயில்: milind[at]nic[dot]in, Mob.: +91-9650152599, 9868899962}



(Release ID: 1611715) Visitor Counter : 183