அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, கொவிட்-19 ஐ விரைவாகக் கண்டறியும் சோதனையை உருவாக்கும் சுகாதார நிறுவனத்திற்கு உதவி
प्रविष्टि तिथि:
06 APR 2020 3:21PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புனேவைச் சேர்ந்த “Module Innovations” என்ற தொடக்க நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. அந்த நிறுவனம், நோய்களை விரைவாகக் கண்டறிவதற்காக அதன் இயங்குதள தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதின் மூலம், 10 முதல் 15 நிமிட சோதனையில் கொவிட்-19 ஐக் கண்டறிவதற்கான ஒரு தயாரிப்பை உருவாக்கி வருகிறது.
அதன் முதன்மை தயாரிப்பான ’USense’ மூலம் நிரூபிக்கப்பட்ட கருத்தைப் பயன்படுத்தி, இப்போது அந்த நிறுவனம் மனித உடலில் கொவிட்-19 க்கு எதிராக உருவாக்கப்படும் ஆன்டிபாடிகளை விரைவாகக் கண்டறியும் சாதனமான nCoVSENSEs (TM)களை உருவாக்கி வருகின்றது.
தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், சாதனத்தின் செயல்பாட்டை விளக்கும் சோதனைகள் (POC) மற்றும் முன்மாதிரி ஆகியவை நிரூபிக்கப்பட வேண்டும்.
விரிவான விவரங்களுக்கு இவரை தொடர்பு கொள்ளலாம் : Shri.Sachin Dubey - sachin@moduleinnovations.com -7350840295
•••••••••••••••
(रिलीज़ आईडी: 1611692)
आगंतुक पटल : 155