வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பொலிவுறு நகர இயக்கங்களின் ஒருங்கிணைந்த தகவல் தரவு டேஷ்போர்டுகள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் கோவிட்-19க்காக கண்காணிக்கப்படுகின்றன

Posted On: 06 APR 2020 2:44PM by PIB Chennai

பூனா, சூரத், பெங்களூரு மற்றும் தும்கூரூ போன்ற பொலிவுறு நகரங்கள் தகவல் தரவு பகுப்பாய்வாளர்கள் மற்றும் தகவல் தரவு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்தரவு டேஷ்போர்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தப் பொலிவுறு நகரங்களின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (பல நகரங்களில் இவை கொவிட்-19 போர்க்கால அறைகளாகச் செயல்பட்டு வருகின்றன) இதற்கு உதவுகின்றன.  நகரங்களின் பல்வேறு நிர்வாக மண்டலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த அவ்வப்போதைய அண்மைக் காலத் தகவல்களை இவை வழங்குகின்றன.

பூனா பொலிவுறு நகர மேம்பாட்டுக் கழக லிமிட்டெட்டானது (PSCDCL) பூனா நகராட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து கொரோனா வைரசின் உலகளாவிய தொற்றுக்கு எதிராக நகரம் எடுத்த முயற்சிகளுக்காக ஒருங்கிணைந்த தகவல் தரவு டேஷ்போர்டுகளை உருவாக்கி உள்ளது.  நகரத்தில் உள்ள ஒவ்வொரு நோயாளியும் இருக்கும் இடமானது புவி-இட தகவல் அமைப்பு மூலம் வரைபடத்தில் குறிக்கப்படுகிறது.  நகர நிர்வாகம் இந்தப் பகுதிகளை கண்காணிக்கிறது.  கொவிட்-19 தொற்றுள்ளவர் என்று அறியப்பட்ட நோயாளி இருக்கும் இடத்தைச் சுற்றி இருப்பு காப்பிடங்களை நகர நிர்வாகம் ஏற்படுத்துகிறது.

குடிமக்களுக்கு தொடர்ச்சியாக அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டத் தகவல்களைத் தரும் வகையில் சூரத் நகராட்சியானது தனது வலைத்தளத்தில் ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை வெளியிட்டு உள்ளது.  இந்த டேஷ்போர்டில் பரிசோதிக்கப்பட்டவர், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர், தற்போதுள்ள நோயாளிகள், சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரத்தைத் தருகிறது.  அதுமட்டுமின்றி நகரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவிய முறை மற்றும் அதன் போக்கையும் தெரிவிக்கிறது.  இதுவரையிலான மொத்த நோயாளிகள் (தினந்தோறும்), அறிவிக்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை (தேதி வாரியாக), வயது, மண்டலம் மற்றும் பாலினம் வாரியாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் இந்த டேஷ்போர்டு நோய்த் தொற்றின் முறை மற்றும் போக்கைத் தெரிவிக்கிறது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளி இருக்கும் இடத்தைச் சுற்றி 8கி.மீ சுற்றளவுக்கு உள்ள பொதுமக்களைக் கண்காணிப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரூகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) ஒரு ”போர்க்கால அறையை” நிர்மாணித்துள்ளது.  கோவிட்-19 டேஷ்போர்ட்டைப் பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சியில் உள்ள போர்க்கால அறையானது கொரோனா வைரஸ் தொற்றின் போக்குகள் குறித்த தினசரி தகவல் அறிக்கையை வெளியிடுகிறது.  தேதி, மண்டலம், மருத்துவமனை, வயது மற்றும் பாலினம் வாரியான விவரங்கள் போர்க்கால அறையில் பராமரிக்கப்பட்டு அவை தினமும் வெளியிடப்படுகின்றன.

 

 



(Release ID: 1611670) Visitor Counter : 204