உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உணவு பதப்படுத்தும் துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சம்மந்தப்பட்ட துறைகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது:- ஹர்சிம்ரத் கவுர் பாதல்

கோவிட் 19 ஊரடங்கு காலத்தில், உணவு பதப்படுத்தும் தொழில் துறை பிரதிநிதிகளுடன், இரண்டாவது முறையாக காணொளி மாநாடு நடத்தினார், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்

Posted On: 05 APR 2020 2:07PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட துறைகளுடன், இத்துறை சார்ந்த தொழில்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் என்று உணவு பதப்படுத்தும் தொழில்துறை மத்திய அமைச்சர் திருமிகு ஹர்சிம்ரத் கவுர் கூறினார். ஊரடங்கு முடிவடைந்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் உணவு பதப்படுத்தும் துறையின் மேம்பாட்டிற்காக அரசு மேற்கொள்ள வேண்டியவை பற்றி ஆலோசிப்பது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இந்தியத் தொழில், வணிகக்கூட்டமைப்பு, (FICCI), இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (CII), தொழில், வணிகங்களுடன் தொடர்புடைய அமைப்பான ASSOCHAM, பிஎச்டி வர்த்தக சபை (PHDCCI) உட்பட பல்வேறு முக்கிய அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளுடன், அமைச்சர் இரண்டாவது காணொளி மாநாட்டை, 4 ஏப்ரல் 20 20 அன்று நடத்தினார். முதலாவது காணொளி மாநாட்டிற்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நிலை குறித்தும், தொழிலில் நிலவிவரும் சூழலை எளிமைப்படுத்த, மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இக்காணொளி மாநாட்டின்போது கூறினார்கள்.

 

உணவு பதப்படுத்தும் தொழில் துறை எதிர்நோக்கும் நுட்பமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், உணவுப் பொருள்களும், மருந்துப் பொருள்களும், தங்கு தடையின்றிக் கிடைப்பதற்காக பொருள் வழங்கு இணைப்பை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மேலாண்மைக்காகவும் ஏற்படுத்தப்பட்டிருந்த குறைதீர்க்கும் மையத்திற்கு 348 பிரச்சினைகள் வரப் பெற்றன என்றும், இவற்றில் 50 சதவிகித பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டன என்றும், மற்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. களத்தில் பணிகள் ஆரம்பமாகிவிட்டன என்றும், உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கு அமைச்சகம் அபரிமிதமான ஆதரவு அளித்து வருவதாகவும், தொழில்துறை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு, உணவு பதப்படுத்தும் தொழில்துறை சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு, தொழில்துறை தலைவர்களை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வேலையாட்கள் பணிக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்து கவலை தெரிவித்த தொழில்துறையினர், அதற்கென சிறப்பு ரயில்கள் தேவைப்படலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தனர். தற்போதைய உடனடி பண நெருக்கடி பிரச்சினை பற்றிக் குறிப்பிட்ட அவர்கள், (நடைமுறை மூலதனம்) தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு, வேளாண் விளை பொருள்களை வாங்குவதற்கு முதலீடு தேவை என்றும் கூறினார்கள். வடகிழக்குப் பகுதிகளின் செயல்பாடுகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.

 

****



(Release ID: 1611340) Visitor Counter : 167