பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 தொற்றில் இருந்து சுகாதார பராமரிப்பாளர்கள் பாதுகாக்க கிருமிநாசினி மேல் உறைகள் முகக் கவசங்கள்: டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.

Posted On: 04 APR 2020 6:29PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) விரைவான முறையில் பாதுகாப்புப் பொருட்களை தனது அறிவியல் அனுபவங்களைப் பயன்படுத்தி உருவாக்கி வருகிறது. இவற்றை மிக அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக டிஆர்டிஓ ஆய்வு நிறுவனங்கள் தொழிற்சாலைகளுடன் பங்குதாரர்களாக இணைந்து தயாரிக்கின்றன. 

பணியாளர்களுக்கான கிருமிநாசினி பாதை:  இது ஒரு சமயத்தில் ஒருவர் என்ற முறையில் பணியாளர்களை கிருமி நீக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

 

 

 

 

700 லிட்டர் மொத்த கொள்ளளவு கொண்ட கொள்கலன்களைக் கீழே கொண்ட இந்த பாதை அமைப்பு மேற்கூரையால் மூடப்பட்டு இருக்கிறது. இந்தக் கிருமி நாசினி திரவமானது அறையைக் கடந்து செல்லும் சுமார் 650 பணியாளர்களை கிருமி நீக்கம் செய்யும். கிருமி நாசினி திரவமானது தீர்ந்த பிறகு மீண்டும் நிரப்பிக் கொள்ளலாம்.

முழுமுகக் கவசமானது: கோவிட்-19 தொற்று நோயாளிகளைக் கையாளுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கானது ஆகும்.  லேசான எடையில் தயாரிக்கப்படும் இது நீண்ட நேரம் வசதியான முறையில் அணிந்திருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

 

 



(Release ID: 1611300) Visitor Counter : 131