சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 குறித்த தற்போதைய நிலவரம்

Posted On: 04 APR 2020 7:11PM by PIB Chennai

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகம் மற்றும் வாய் பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்துவது குறித்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

 

 

கோவிட் 19 தொற்று உள்ளவர்களாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளவர்களின் வயது அடிப்படையிலான புள்ளி விவரங்களை ஆராய்கையில் பின்வரும் விவரங்கள் புலனாகின்றன:

  •  
  • 08.6 1%                                   பூஜ்யம் முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்
  •  
  • 41.88%                                    21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்                       
  •  
  • 32.82 %                                   41 முதல் 60  வயதுக்குட்பட்டவர்கள்                         
  •  
  • 16.6 9%                                   அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்  

                   

இதுவரை 2902 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 68 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 183 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். தெரிவிக்கப்பட்டுள்ள 2902 நோயாளிகளில், 1023 பேர் தப்ளிகி ஜமாத் நிகழ்வுடன் தொடர்புடையவர்கள். தமிழ்நாடு, டில்லி, ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உட்பட 17 பதினேழு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

 

 


(Release ID: 1611286) Visitor Counter : 157