அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
                
                
                
                
                
                
                    
                    
                        இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை கொவிட் 19 தொற்று நோயை எதிர்க்க இரசாயனம் கலக்காத, வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட கிருமிநாசினியை உருவாக்க நிதியுதவி அளிக்கிறது.
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                04 APR 2020 5:11PM by PIB Chennai
                
                
                
                
                
                
                WE innovate Biosolutions“ என்ற பூனேவே சேர்ந்த சிறிய தொழில் நுட்ப நிறுவனத்துடன், இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும், உயிரியல் தொழில்நுட்பத் துறையும்  கூட்டாக இணைந்து வெள்ளியின் மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்படும் இரசாயனம் கலக்காத நீர்மக்கரைசலை, கிருமிநாசினியாக உருவாக்கியுள்ளது. 
இந்த திரவ கிருமி நாசினி  எளிதில் தீப்பற்றாது  என்பதுடன் அபாயகரமான இரசாயனங்கள் இல்லாதது. அதுமட்டுமன்றி இந்த திரவ கிருமிநாசினி  தொற்று பரவுவதைத் தடுக்க ஒரு சிறந்த தடுப்பானாகச் செயல்படும். இந்தக்  கிருமி நாசினியைத்  தொற்றுநோயால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள சுகாதாரத்துறை பணியாளர்களும், மருத்துவ வல்லுநர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரிதும் உதவுகிறது. 
 
(For further details, contact 
Dr. Milind Choudhari, Co-founder Weinnovate Biosolutions
Email: milind.bio[at]gmail[dot]com, 
Mob: 9867468149).
                
                
                
                
                
                (Release ID: 1611269)
                Visitor Counter : 230