மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கோவிட் 19 தொற்றுநோய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணைத் தலைவர்கள்/ துணைவேந்தர்களுடன் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காணொளி மாநாடு.
प्रविष्टि तिथि:
04 APR 2020 9:39PM by PIB Chennai
கோவிட் 19 பரவிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைத் தலைவர்களுடன், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொளி மூலம் உரையாடினார்.
ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா என்ற திட்ட உத்திகள் மூலமாகவும், மின்னணு ஊடகங்கள் மூலமாகவும் பாடத்திட்டங்களை கற்பதற்குத் தங்களது மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் கல்வித் திட்டத்தை பரவலாக்கவும், மேம்படுத்தவும், ஆன்லைன் தேர்வுகள் வைப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் திரு பொக்ரியால் தெரிவித்தார்.
(रिलीज़ आईडी: 1611268)
आगंतुक पटल : 230