சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனை கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் தயார் நிலையில் உள்ளதா என்று அறிவதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் மருத்துவமனையைப் பார்வையிட்டார்

Posted On: 04 APR 2020 4:36PM by PIB Chennai

கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ள தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனை தயார் நிலையில் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார்.

 

மருத்துவமனை வளாகத்தையும் பல்வேறு வார்டுகளையும் சோதனையிட்டு, விரிவாகப் பரிசீலித்த பிறகு தற்போது நிலவும் சூழல்களில், உங்களுக்கும், உங்களது சேவைகளுக்கும், நாடு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்று அமைச்சர்  கூறினார்.

 

கோவிட் நோயாளிகளுக்காக, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் 1500 (ஆயிரத்து ஐநூறு) படுக்கைகளையும், ஜிபி பந்த் மருத்துவமனையில் 500 படுக்கைகளையும், அரசாங்கம் கண்டறிந்துள்ளது என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.

 

பாதுகாப்புக் கருவிகள், தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள், N 95 கவசங்கள் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகள் பற்றிக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், நாட்டின் அதிகரித்துவரும் தேவையை சமாளிப்பதற்காக வருங்காலத்தில், தேவைப்படக்கூடிய போதுமான அளவிற்கான மருத்துவப் பொருள்களுக்கு ஆர்டர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டன என்றும் கூறினார்.

*****


(Release ID: 1611117) Visitor Counter : 172