அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மும்பை ஐ.ஐ.டி. சினேவில் அதிரடி சிகிச்சை மையத்தை அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைக்கிறது

Posted On: 03 APR 2020 5:35PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான அதிரடி சிகிச்சை வசதியை உருவாக்கும் நோக்கில், கோவிட்-19 சுகாதார நெருக்கடியில் (Centre for Augmenting WAR with COVID-19 - CAWACH)  புதுமைகண்டுபிடிப்புகளை  மேம்படுத்துவதற்கான மையத்தை அமைக்க மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட்-19 சவால்களை எதிர்கொள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் புதுமை சிந்தனைகளை மதிப்பீடு செய்து ஆதரவு அளிப்பதற்கு இந்த மையம் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படும்.

தகுதிவாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் ஆதரவு அளித்து, தேவையான நிதி உதவிகள் செய்து, அடுத்த 6 மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரக் கூடிய புதுமை சிந்தனைகளுக்கு நிதி அளிப்பது CAWACH -ன் நோக்கமாக இருக்கும்.

{கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

பொய்னிபாட், தலைமை செயல் அதிகாரி,

சினே,

ஐ.ஐ.டி., மும்பை,

தொலைபேசி : +91 22 25767072

இமெயில் : poyni.bhatt@sineiitb.org

www.sineiitb.org

டாக்டர் அனிதா குப்தா, விஞ்ஞானி-ஜி

அறிவியல் & தொழில்நுட்பத் துறை

செல்போன்: +91-9811828996

இமெயில்: anigupta[at]nic[dot]in}

*****


(Release ID: 1610959) Visitor Counter : 266