ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட் - 19 நோய் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும், மருத்துவ சாதனங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை எதுவும் இல்லை:கவுடா

Posted On: 03 APR 2020 4:22PM by PIB Chennai

கொவிட் - 19 நோய் பரவாமல் தடுப்பதற்காக, நாடு முழுவதும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏதுமில்லை பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா கூறியுள்ளார்.

 

கொவிட் 19 நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய மருத்துவ பொருட்களும் தங்கு தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது என்று திரு கவுடா ட்வீட் செய்துள்ளார். 62 உயிர்காக்கும் உடான் விமானங்கள் மூலமாக கடந்த 5 நாட்களில் 15.4 டன்னுக்கும் அதிகமான, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். சரக்குப் போக்குவரத்து விமானங்கள், கடந்த நான்கு நாட்களில், நாடு முழுவதும் 10 டன் மருத்துவக் கருவிகளை கொண்டு சென்றுள்ளன என்றும் திரு கவுடா குறிப்பிட்டுள்ளார்.

 

மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் பணிகள் குறித்து, அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், இருநூறுக்கும் மேலான யூனிட்டுகள் இயங்கி வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை பகிர்ந்து கொடுப்பதைக் கண்காணிப்பதற்கும், போக்குவரத்து தொடர்பான விஷயங்கள் குறித்து கவனிப்பதற்காகவும் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் திரு கவுடா தெரிவித்தார்.(Release ID: 1610727) Visitor Counter : 142