எரிசக்தி அமைச்சகம்
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் அமைச்சகங்களின் கீழான பொதுத்துறை நிறுவனங்கள் 925 கோடி ரூபாய் பங்களிப்பு
Posted On:
03 APR 2020 3:49PM by PIB Chennai
கொவிட்- 19 உலக அளவிலான தொற்றுநோய் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டுள்ள PM CARES { நெருக்கடி காலங்களில் குடிமக்களுக்கு உதவுவதற்காகவும், நிவாரணம் வழங்குவதற்காகவுமான பிரதமரின் நிதியம்) நிதியத்திற்கு 925 கோடி ரூபாய் வழங்க, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் மத்திய பொது துறை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தமது அமைச்சகங்களின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்களின் இந்த மிக முக்கிய பங்களிப்பு குறித்து, மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் துறை அமைச்சர் திரு ஆர்கே சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “மத்திய மின் துறை மற்றும் MNRE அமைச்சகங்களின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் PM CARES நிதியத்திற்கு 925 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ளன. இத்தொகையில், 445 கோடி ரூபாய், 31 மார்ச் 2020 அன்று ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. மீதித் தொகை, ஏப்ரல் முதல் வாரத்தில் செலுத்தப்படும். மொத்த 925 கோடி ரூபாயில், மின் துறை அமைச்சகத்தின் பொதுப்பணித்துறையின் பங்களிப்பு 905 கோடி ரூபாய். MNREயின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 20 கோடி ரூபாய்” என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(Release ID: 1610726)
Visitor Counter : 194