உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று எதிர்த்து போராடுவதற்கான பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து விவசாயப் பொருள் சந்தைப்படுத்துதல், அங்கன்வாடி பணியாளர்கள் ஆயுஷ் போன்ற சேவைகளுக்கு விலக்கு

Posted On: 02 APR 2020 9:40PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று எதிர்த்து போராடுவதற்காக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களில் இருந்து குறிப்பிட்ட சேவைகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்து, மேற்கண்ட கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கப்படும் சேவைகளின் விவரங்கள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சேவைகள் குறித்து மாநிலங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் விரிவாக பின்வருமாறு:

* விவசாயப் பொருட்களின் நேரடி சந்தைப்படுத்துதல்

* குழந்தைகள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உணவு  ஊட்டச்சத்து ஆதரவு அளிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

* ஆயுஷ் பிரிவின் கீழ் உள்ள மருத்துவ பணிகள்  மருந்து தயாரிப்பு

விலக்களிப்பட்ட பிரிவுகள் குறித்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டத் தகவலைப் பார்க்க இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

*****



(Release ID: 1610660) Visitor Counter : 81