பாதுகாப்பு அமைச்சகம்

நடுக்கடலில் தவித்த மீனவர்களுக்கு உதவியது இந்திய கடற்படை போர் கப்பல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2020 6:32PM by PIB Chennai

கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைத் தலைமையின், நீர்மூழ்கி ஆதரவு கப்பலான ஐஎன்எஸ் நிரீக்ஷக், 1 ஏப்ரல் 2020 அன்று கேரள கடற்கரையோரம் மேற்கோன்ட ரோந்துப் பணியின் போது கொச்சிக்கு அருகில்  கடலில் தமிழ்நாட்டை சேர்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்னும் மீன்பிடி படகில், சிக்கித் தவித்து வந்த 10 மீனவர்களுக்கு உதவியது.

தமிழ்நாட்டில் உள்ள தங்களின் சொந்த துறைமுகமான கொளச்சலை அடைவதற்கு போதிய எரிபொருள், தன்ணீர் மற்றும் மளிகை இல்லாததால், 10 பணியாளர்களைக் கொண்ட இந்த படகு, கொச்சிக்கு வெளியே தவித்தது. படகு சிக்கலில் உள்ளது என்பதை உணர்ந்த ஐஎன்எஸ் நிரீக்ஷக், அவர்கள் சொந்த துறைமுகத்துக்கு சென்றடையத் தேவைப்படும் 300 லிட்டர்கள் எரிபொருள், தண்ணீர் மற்றும் மளிகைப் பொருள்களைக் கொடுத்து உதவியது. கோவிட் 19க்கு எதிரான சுகாதார அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொருள்களும் படகு மற்றும் பணியாளர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் கொடுக்கப்பட்டன. கப்பலில் உள்ள பளுதூக்கி மூலம் எரிபொருள், தண்ணீர் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கொச்சியில் இருந்து மார்ச் 12 அன்று அரபிக் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்ற இந்த படகு, அதன் பின் எந்த துறைமுகத்தையும் தொடவில்லை. கொரோனாவின் காரணமாக பொது முடக்கம் தற்போது அமலில் உள்ளதால் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும் இதர பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் இந்தப் படகு கொச்சி துறை முகத்துக்குள் நுழைய முடியவில்லை.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1610658) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu