மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆரோக்யசேது செயலி: ஒரு பன்முகப்பாலம்

Posted On: 02 APR 2020 4:21PM by PIB Chennai

கோவிட்- 19 நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, அரசு-தனியார் கூட்டு முயற்சியில் அலைபேசி செயலி ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது .

ஒவ்வொரு இந்தியரும் நலமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்பதற்காக ஆரோக்யசேது என்ற இந்தச் செயலி, டிஜிட்டல் இந்தியாவில் இணைந்துள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா, என்று மக்கள், தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்தச் செயலி உதவும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு கலந்து பழகுகிறார்கள்  தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; எந்த அளவிற்கு நவீன ப்ளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்; கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படும். பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான முறையில் எளிமையானதாக,அமைந்துள்ள இந்தச் செயலியை, ஸ்மார்ட் போன் அலைபேசியில் நிறுவிய பின்னர், இந்த அலைபேசிக்கு அருகேயுள்ள இதர கருவிகளை, ஆரோக்யசேது கண்டறியும். இந்த நவீன அளவுகோல்களின் (பாராமீட்டர்கள்) அடிப்படையில், இந்த தொடர்புகளில் ஏதேனும் ஒன்று பாசிட்டிவாக இருந்தால், எந்த அளவிற்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை, இந்தச் செயலி கண்டறியும்.

 

கோவிட்- 19 தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் தனிமைப்படுத்துதலை உறுதி செய்யவும், இந்தச் செயலி, அரசுக்கு உதவும்.

 

இந்தச் செயலியின் வடிவமைப்பு, முதலில், தனிநபர் அந்தரங்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செயலியால் சேகரிக்கப்படும் தனிநபர் புள்ளிவிவரங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு சங்கேதக் குறியீடுகளாக மாற்றப்படும் (Encrypt). மருத்துவ சிகிச்சை முறைகளுக்குத் தேவைப்படும் வரை, இந்தத் தகவல்கள் தொலைபேசியில் பத்திரமாக இருக்கும்

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே இந்தியா முழுமையும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான இந்தச் செயலி, பதினோரு  மொழிகளில் கிடைக்கும். தேவைக்கேற்ற வகையில் இந்தச் செயலியை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

********(Release ID: 1610418) Visitor Counter : 254