உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோயைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீதான தண்டனை நடவடிக்கைகள் பற்றி பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

प्रविष्टि तिथि: 02 APR 2020 4:29PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நிர்வாகங்கள் மேற்கொள்ளவேண்டிய முழு அடைப்பு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் படி தங்களுக்குள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, முழுஅடைப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே எழுதியிருந்தது.

 

இதை மீண்டும் வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சகச் செயலர் திரு அஜய்குமார் பல்லா, அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் உள்ள சட்டங்களின் படி, முழு அடைப்பு நடவடிக்கைகளை மீறினால் எடுக்கக்கூடிய தண்டனை விவரங்கள் குறித்து, பொது மக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முழுஅடைப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

மாநிலங்களுக்கான தகவலுக்கு இங்கே பார்க்கவும்

 

 

 

தண்டனை சட்டங்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்

 

*****


(रिलीज़ आईडी: 1610404) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam