பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாட்டின் 410 மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேசிய கொரோனா கணக்கெடுப்பை டாக்டர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டார்
Posted On:
02 APR 2020 3:17PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று குறித்த தேசிய தயார்நிலை ஆய்வு அறிக்கை – 2020 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பதில்களை (2014-2018 பேட்ச்) ஊழியர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையின் பிரதி https://darpg.gov.in. என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 தேசிய தயார்நிலை ஆய்வு அறிக்கை 2020 நாட்டில் உள்ள 410 மாவட்டங்களில் 3 வேலை நாட்களுக்குள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையானது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாபெரும் சுகாதார நெருக்கடியை சமாளிக்க நாடு எதிர்கொள்ளும் சவால்களை அரசு ரீதியில் நிர்வாகம் செய்வது குறித்த ஒரு பரந்துபட்ட பார்வையை தெரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.
இந்த தயார்நிலை ஆய்வு அறிக்கையின் முக்கிய குறிக்கோள்கள் கீழே தரப்படுகின்றன:
- பல்வேறு மாநிலங்கள் கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் எந்த அளவிற்கு தயாராக உள்ளன என்று ஒப்பிட்டு ஆய்வு செய்வது வளர்த்தெடுத்தல்
- இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிவில் அதிகாரிகளுடைய பார்வையில் கோவிட்-19 தயார் நிலைக்கான முக்கிய முன்னுரிமைகள் மற்றும் தடைகளை புரிந்து கொள்ளுதல்
- நிறுவனம் / போக்குவரத்து / மருத்துவமைனை ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு உதவக்கூடிய காரணிகளை அறிதல்
- இந்தியாவின் மாநிலங்களில் கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் ஏற்படுகின்ற அமைப்பு மற்றும் செயல்முறை சார்ந்த பற்றாக்குறைகளை கண்டறிந்து அதன் மூலம் நடப்பு செயல்பாடுகளை புரிந்து கொள்ளுதல்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தயார் நிலை ஆய்வு அறிக்கையானது இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. கள நிலையில் தலைமை வகிக்கின்ற 410 சிவில் அதிகாரிகளிடம் இருந்து பதில்கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்திய அரசில் உதவி செயலாளர்களாக பணியாற்றும் 2014-2018 பேட்ச்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த சர்வேயில் பங்கேற்றனர். இந்த சர்வே மார்ச் 25, 2020 முதல் தொடர்ச்சியான 3 வேலை நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங் மார்ச் 19, 2020 மற்றும் மார்ச் 24, 2020ல் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய மக்களை தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வைரஸ் தொற்றை தடுக்க போராட வேண்டும் என்று வலியுறுத்தியதை குறிப்பிட்டார். இந்தியாவில் சர்வதேச நோய்த்தொற்றை எதிர்க்க வேண்டும் என்ற பிரதமரின் பொறுப்புணர்வுக்கு மக்கள் செவிமடுத்தனர். இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து திசைகளிலும் உள்ள லட்சக்கணக்கான சிவில் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மார்ச் 22, 2020 முதல் இன்று வரை பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றி வருகின்றனர்.
தேசிய மற்றும் மாநில அளவில் கொள்கை உருவாக்குபவர்களுக்கு இந்த ஆய்வு அறிக்கையானது ஒப்பீட்டு அளவீடாக உதவும் முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைப் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுகின்ற பிரதம மந்திரிக்கு டாக்டர் ஜித்தேந்திர சிங் நன்றி தெரிவித்தார். இந்திய குடிமக்கள் மற்றும் அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைகள் மூலம் வரும் நாட்களில் இந்தியா எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடி தீரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
*****
(Release ID: 1610341)