தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொவிட்-19 உண்மை சரிபார்த்தல் பிரிவை அமைத்தது பத்திரிகை தகவல் அலுவலகம்

இரவு 8 மணிக்கு தினசரி கொவிட் செய்தித் தொகுப்பை பத்திரிகை தகவல் அலுவலகம் அளிக்கும்

Posted On: 01 APR 2020 10:12PM by PIB Chennai

தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொண்டு அவற்றுக்கான பதில்களை விரைந்து அளிக்கும் கொவிட்-19 உண்மை சரிபார்த்தல் பிரிவு என்னும் இணையதளத்தை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) அமைத்துள்ளது. கொவிட்-19 குறித்த அரசின் முடிவுகளையும், முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்த தினமும் இரவு 8 மணிக்கு ஒரு செய்தித் தொகுப்பை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும். இன்று மாலை 6.30க்கு முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

மேலும், கொவிட்-19 பற்றிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பொது மக்களின் மனங்களில் ஏதாவது சந்தேகங்கள் எழுந்தால், அவற்றை தெளிவுப்படுத்துவதற்காக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்ற நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை சுகாதார,  குடும்ப நல அமைச்சகம் அமைத்துள்ளது. இடம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள உளவியல் சிக்கல்களைக் கையாள விரிவான வழிகாட்டுதல்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 மேலாண்மையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவெடுக்கக் கூடிய தெளிவான ஆணையுரிமையுடன், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள  அதிகாரம் பொருந்திய 11குழுக்கள் குறித்து மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தி அமைச்சரவை செயலாளர் கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். மாநில அளவிலும் இதே போன்றதொரு கட்டமைப்பை உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தோர் நல நடவடிக்கைகளைக் கண்காணிக்க தன்னார்வலர்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.



(Release ID: 1610185) Visitor Counter : 90