தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பயமுறுத்தக்கூடிய, சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted On: 01 APR 2020 3:34PM by PIB Chennai

செய்தித் தாள்கள், மின்னணு மற்றும் சமூக தொலைதொடர்பு ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் மிகப் பெரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், பயமுறுத்தக்கூடிய, சரிபார்க்கப்படாத செய்திகள் எதுவும், பரப்பப்படவில்லை என்பதை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஊடகங்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

பொது முடக்கம் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் என்று பொய்யான செய்தியினால் ஏற்பட்ட பீதியின் காரணமாகவே, நகரங்களில் பணிபுரியும், பெரும்பாலானவர்கள், வேறு மாநில மக்கள் வெளியேறிச் செல்வது தொடங்கியது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. செய்தித் தாள்கள், மின்னணு, சமூக தொலைத்தொடர்பு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட போலி செய்திகளினால் ஏற்பட்ட பீதியினால் மக்கள் இடம் பெயரத் தொடங்கினர்; இத்தகைய செய்திகளினால் அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர்; சிலர் தங்கள் உயிரையும் இழக்க நேரிட்டது; இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

 

இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு ஆணையில், உலகளாவிய இந்த தொற்று வெளிப்படையான கலந்துரையாடல்களில் தலையிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் நினைக்கவில்லை; ஆனால் அதே சமயம் ஊடகங்கள் இவை குறித்த அதிகாரபூர்வ செய்திகளை வெளியிட / பிரசுரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அந்த ணையின் முழு விவரமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய தொடர்பு மூலம் படிக்க முடியும்.

 

https://mib.gov.in/sites/default/files/OM%20dt.1.4.2020%20along%20with%20Supreme%20Court%20Judgement%20copy.pdf

******



(Release ID: 1609974) Visitor Counter : 154