சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 குறித்த புதுப்பிப்புத் தகவல்கள்
प्रविष्टि तिथि:
31 MAR 2020 6:29PM by PIB Chennai
நாட்டில் கொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல், மேலாண்மை ஆகியவை உயர்மட்ட அளவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளின் உயர் அதிகாரிகள், மாநில அரசுகள் , யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் அவ்வப்போது தொடர்பு கொண்டு ,நிலைமையை உன்னிப்பாக கவனித்து, ஆய்வு நடத்தி வருகிறார்.
கிராமப்புற பெண் செவிலியர்கள், அங்கிகரிக்கப்பட்ட சுகாதார சமூக சேவகர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரக் களக்கண்காணிப்பு நிபுணர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வுக்கூட சோதனை, பரிசோதனை மேலாண்மை, தனிமை வசதி மேலாண்மை, தீவிர சிகிச்சைப் பிரிவு, தொற்றைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை, தனிமைப்படுத்துதல் வசதி மேலாண்மை ஆகிய கொவிட் -19 குறித்த பயிற்சி ஆதாரங்களை வலைதளத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பதிவேற்றியுள்ளது. சுகாதார அமைச்சகம் மார்ச் 30-ஆம்தேதி ஆன்லைன் மூலமாக இரண்டு பயிலரங்குகளை நடத்தியுள்ளது. இதில் 15000 செவிலியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுவரை, 1251 பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிழந்துள்ளனர்.
(रिलीज़ आईडी: 1609825)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam