பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்- 19 மீட்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் அமல்படுத்துவதை உறுதி செய்யும் அதிகாரமளிக்கப்பட்ட 10 அதிகாரிகள் குழுவின் முடிவுகள்

Posted On: 31 MAR 2020 3:57PM by PIB Chennai

கொவிட்- 19 மீட்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கு, பொது மக்களின் குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த,  2005-ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட 10 அதிகாரிகள் குழு மார்ச் 31-ந்தேதி கூடி பின் வரும் முடிவுகளை எடுத்தது. பிரச்சினை மிகுந்த இடங்களைக் கண்டறிவது, கொள்கைகளை வரையறுப்பது, திட்டங்களை வகுப்பது, செயல்பாட்டு உத்திகளையும், முடிவுகளையும் கால வரையறைக்குள் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை அந்த முடிவுகள். இந்தக் கூட்டத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் திரு.அமித் காரே, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை  தீர்வுத் துறை செயலர் டாக்டர்.சத்ரபதி சிவாஜி, மத்திய உள்துறை இணை செயலர் திரு.அசுதோஷ் அக்னிஹோத்ரி, அமைச்சரவை செயலக இயக்குநர் திருமதி. மீரா மொஹந்தி மற்றும் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் குறைபாடுகள்;

இந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை ஐந்து அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைக்கும். மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் வலைதளத்தில் பெறப்பட்ட ஆலோசனைகள், குறைபாடுகள், தீர்வு காணப்பட்டவை குறித்த பட்டியல்,  அது குறித்த சுருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொவிட்-19 பற்றிய தினசரி அறிக்கைகளை அந்தக்குழு தயாரிக்கும்.

 

****



(Release ID: 1609640) Visitor Counter : 131