சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

காலாவதியாகும் ஓட்டுனர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு சான்றுகள் ஜூன் 30 வரை செல்லுபடியாகும். தகுதிநிலை சான்று, பெர்மிட்டுகள், ஓட்டுனர் உரிமம், பதிவு மற்றும் இதர மோட்டார் வாகன ஆவணங்களும் இதில் உள்ளடங்கும்

Posted On: 31 MAR 2020 10:35AM by PIB Chennai

மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் பதிவு போன்ற பிப்ரவரி முதல் தேதியிலிருந்து காலாவதியாகின்ற ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நீட்டித்து உள்ளது.  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி உள்ள ஆலோசனை நெறிமுறையில் அமைச்சகமானது இத்தகைய ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜுன் 30 வரை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான பொது முடக்கம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 

தகுதிநிலை சான்று, பெர்மிட்டுகள் (அனைத்து வகை), ஓட்டுனர் உரிமம், பதிவுச்சான்று அல்லது மோட்டார் வாகன விதிகளின் கீழ் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆகியனவும் இதில் அடங்கும். 

அனைத்து மாநிலங்களையும் இந்த ஆலோசனையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு செயல்படுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.  அப்போதுதான் பொதுமக்கள், இன்றியமையாத சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள வாகன இயக்குனர்கள் மற்றும் நிறுவனங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகமலும் அதிக சிரமம் இல்லாமலும் செயல்பட முடியும்.

 

***



(Release ID: 1609469) Visitor Counter : 164