ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு கவுடா தனது ஒரு மாத ஊதியத்தை கொவிட்-19 தொடர்பான பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2020 2:56PM by PIB Chennai

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா, கொவிட் பெருந்தொற்று தொடர்பான நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தையும், நாடளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயையும் அளிக்கத் தீர்மானித்துள்ளார். இதை அறிவித்த அமைச்சர், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசர தேவையைக் கருத்தில் கொண்டு `எனது ஒரு மாத ஊதியத்தையும், நாடளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயையும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், அரசு தேவையான நடவடிக்கைகளை குறித்த காலத்திற்குள் உடனுக்குடன் எடுத்து வருவதாகத் தெரிவித்த திரு.கவுடா, பொது மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும், சிறந்த பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் இலக்குடன் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1609275) வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada