உள்துறை அமைச்சகம்
கொவிட்-19 தொற்றுநோயை முறியடிக்கும் முன்னேற்பாடுகள் பற்றிய மூன்றாவது கூட்டத்துக்கு திரு.அமித் ஷா தலைமை வகித்தார்
பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சாதாரண மக்களுக்கு தினசரி அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்
ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி அரசு உறுதி பூண்டுள்ளது: திரு. அமித் ஷா
Posted On:
28 MAR 2020 10:13PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, கொவிட்-19 நோயை முறியடிப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புதுதில்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தொற்று பரவலைத் தடுப்பதற்கான பொது முடக்கம் தொடங்கிய மார்ச் 25-ம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கிணங்க, சாதாரண மக்களுக்கு தினசரி தேவையான அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவில் கிடைக்க ,அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக திரு.ஷா இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு.நித்யானந்த் ராய், திரு. கிஷண் ரெட்டி, அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ‘சமூக விலகல்’ கட்டுப்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
கொவிட்-19 தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எடுத்துள்ள முடிவுகள் பற்றி தெரிந்து கொள்ள, பின்வரும் தளத்தை அணுகவும். https://mha.gov.in/sites/default/files/PR_ConsolidatedGuidelinesofMHA_28032020.pdf .
Decisions of the Home Ministry taken so far regarding COVID-19 can be accessed on https://mha.gov.in/sites/default/files/PR_ConsolidatedGuidelinesofMHA_28032020.pdf .
*****
(Release ID: 1609033)
Visitor Counter : 204