குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கோவிட்-19ஐ எதிர்த்து போராடுவதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பங்களிக்க வேண்டும் - குடியரசுத் துணை தலைவர் வேண்டுகோள்

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் அளிக்க வேண்டுமென தன்னார்வ மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார் குடியரசுத் துணை தலைவர்.

பிரதமர் நிதிக்கு பங்களிக்கும் படி மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் வேண்டுகோள்

Posted On: 29 MAR 2020 12:02PM by PIB Chennai

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறைந்தது ரூ 1 கோடியாவது கோவிட்-19 தொற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டுமென்று இந்திய குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு  கேட்டுக்கொண்டார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைப்பற்றி குறிப்பிட்டுள்ள அவர், அதன் பரவலைத் தடுப்பதற்கும், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை களைவதற்கும் இந்திய அரசு மற்றும் தனியார் துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

கோவிட்‍-19 எதிர்த்து வெற்றிகரமாகபோராடுவதற்கு தேவைப்படும் ஏராளமான நிதி, பொருட்கள் மற்றும் மனித உழைப்பைப் பற்றி கூறியுள்ள திரு. நாயுடு, தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் தேவைப்படும் நிதியை கிடைக்கச் செய்ய, இந்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி வளங்களை சேகரித்து வருவதாகக் கூறினார்.

கோவிட்‍-19க்கு எதிரான போராட்டத்தில், சரியான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பெரிதும் உதவும் என்றுக் கூறிய குடியரசுத் துணை தலைவர், நிதி ஆண்டு 2020 -21க்கான தங்களது தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தில் இருந்து குறைந்தது ரூ 1 கோடியாவது முதலில் வழங்க ஒப்புதல் அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

•••••••••••••••


(Release ID: 1609028) Visitor Counter : 115