பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை திரு.தர்மேந்திர பிரதான் அளித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAR 2020 12:43PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு & எஃகுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கொவிட்-19 பரவல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்காக, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை அளித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்த கடினமான காலகட்டத்தில் நமது உதவி தேவைப்படுபவர்களுடன் நாம் துணை நிற்க வேண்டும். கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, எனது ஒரு மாத ஊதியத்தையும், நாடளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயையும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு, பின்தங்கிய மக்களிடம் புன்னகையை மலரச் செய்வதற்காக, அளிக்கிறேன்” கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1609014) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada