நிதி அமைச்சகம்

கோவிட்-19 தாக்குதலை தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் சட்டபூர்வ மற்றும் ஒழுங்காற்று நிவாரணங்கள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டார்

Posted On: 24 MAR 2020 5:10PM by PIB Chennai

கோவிட் 19 பாதிப்பை தொடர்ந்து, மத்திய‌ அரசு, பல்வேறு துறைகளில் உள்ள சட்டபூர்வ மற்றும் ஒழுங்காற்று விஷயங்கள் தொடர்பாக‌ எடுத்துள்ள பல முக்கிய நிவாரண நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திருமதி நிர்மலா சீதாரமன், வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கம் மற்றும் மத்திய கலால், பெருநிறுவன விவகாரங்கள், திவால்நிலை குறியீடு, மீன்வளம், வங்கி மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு மிகவும் அவசியமான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார்.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் உடனிருந்த இந்த நிகழ்வில், நிதித்துறை செயலாளர் திரு ஏ பி பாண்டே மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அட்டானு சக்ரபொர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் உள்ள சட்டபூர்வ மற்றும் ஒழுங்காற்று விஷயங்கள் தொடர்பாக‌ எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பின்வருமாறு:

வருமான வரி

1. வருமான வரி விவரங்களை (நிதி ஆண்டு 18- 19) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச், 2020‍ல் இருந்து 30 ஜூன், 2020க்கு நீட்டிப்பு

2. ஆதார்‍ எண்ணுடன் பான் எண்ணை நீட்டிப்பதற்கான தேதி 31 மார்ச், 2020 ல் இருந்து 30 ஜூன், 2020க்கு நீட்டிப்பு

3. விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தில், ஜூன் 30, 2020க்குள் பணத்தை செலுத்தினால், கூடுதல் 10 சதவீதத்தை செலுத்த வேண்டியதில்லை.

4. வருமான வரி சட்டம், செல்வ வரி சட்டம், பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டம், கருப்பு பண சட்டம், STT சட்டம், CTT சட்டம், ஈக்வலைசேஷன் லெவி சட்டம், விவாத் சே விஷ்வாஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரி செலுத்துவோருக்கு நோட்டிஸ், தகவல்கள், ஒப்புதல் ஆணை, மேல்முறையீடு, விண்ணப்பங்கள், அறிக்கைகள் போன்றவைகளின் காலக்கெடு 20 மார்ச், 2020ல் இருந்து 29 ஜூன், 2020க்குள் இருந்தால், அது 30 ஜூன், 2020 வரை நீட்டிப்பு.

5. முன்கூட்டியே வரி செலுத்துதல், சுய நிர்ணய வரி, TDS, TCS, ஈக்வலைசேஷன் லெவி, STT, CTT போன்றவற்றை 20 மார்ச், 2020ல் இருந்து 30 ஜூன், 2020 வரை தாமதமாக செலுத்தினால், வட்டி விகிதம் வருடத்திற்கு 12% மற்றும் 18% என்பதில் இருந்து குறைக்கப்பட்டு 9 சதவீதமாக மேற்கண்ட காலத்துக்கு வசூலிக்கப்படும் (மாதத்துக்கு 1/1.5 சதவீதத்திலிருந்து 0.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது). தாமத கட்டணம்/அபராதம் போன்றவை இந்த காலத்துக்கு வசூலிக்கப்பட மாட்டாது.

6. இந்த நிவாரணத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் சட்டபூர்வ மாற்றங்கள் விரைவில் வெளியிடப்படும்.

ஜிஎஸ்டி/மறைமுக வரி

1. ரூ 5 கோடிக்கும் குறைவாக சராசரி ஆண்டு விற்றுமுதல் இருப்போர் ஜிஎஸ்டி 3பி விவரங்களை மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், அவர்கள் அதை ஜூன் 2020 கடைசி வாரத்தில் செய்யலாம். வட்டி, தாமத கட்டணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

2. மற்றவர்களும் ஜிஎஸ்டி விவரங்களை மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், அவர்களும் அதை ஜூன் 2020 கடைசி வாரத்தில் செய்யலாம். ஆனால், கடைசி தேதிக்கு 15 நாட்களுக்கு பிறகு, குறைந்த வட்டி விகிதமாக வருடத்துக்கு 9% சதவீதம் மட்டும் விதிக்கப்படும் (தற்போதைய வட்டி விகிதம் வருடத்துக்கு 18%). 30 ஜூன், 2020க்குள் செலுத்தினால் தாமத கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது.

3. கூட்டு திட்டத்தில் (composition scheme) இணைந்து கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 2020 கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 31 மார்ச், 2020ல் முடியும் காலாண்டுக்கான விவரங்களை கூட்டு முகவர்கள் தாக்கல் செய்ய காலக்கெடு ஜூன் 2020 கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4. 2018- 19 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டு விவரங்களை தாக்கல் செய்வதற்கான‌ கடைசி நாள் 31 மார்ச், 2020ல் இருந்து ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

5. ஜிஎஸ்டி சட்டப்படி நோட்டிஸ், தகவல்கள், ஒப்புதல் ஆணை, மேல்முறையீடு, விண்ணப்பங்கள், அறிக்கைகள் போன்றவைகளின் காலக்கெடு 20 மார்ச், 2020ல் இருந்து 29 ஜூன், 2020க்குள் இருந்தால், அது 30 ஜூன், 2020 வரி நீட்டிப்பு.

6. இந்த நிவாரணத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் சட்டபூர்வ மாற்றங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதலுடன் விரைவில் வெளியிடப்படும்.

7. சப்கா விஷ்வாஸ் திட்டத்தின் கட்டண தேதி 30 ஜூன் 2020க்கு நீட்டிக்கப்படும். 30 ஜூன் 2020க்குள் கட்டினால் வட்டி விதிக்கப்படாது.

சுங்கம்

 

8. 30 ஜூன், 2020 வரை 24x7 சுங்க அனுமதி

9. சுங்கம் மற்றும் தொடர்புடைய சட்டங்களின் படி நோட்டிஸ், தகவல்கள், ஒப்புதல் ஆணை, மேல்முறையீடு, விண்ணப்பங்கள், அறிக்கைகள் போன்றவைகளின் காலக்கெடு 20 மார்ச், 2020ல் இருந்து 29 ஜூன், 2020க்குள் இருந்தால், அது 30 ஜூன், 2020 வரி நீட்டிப்பு.

நிதி சேவைகள்

1. 3 மாதங்களுக்கு தளர்வு

2. டெபிட் அட்டைகளை வைத்திருப்போர் 3 மாதங்களுக்கு எந்த ஏடிஎம்மில் இருந்தும் இலவசமாக தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்

3. குறைந்த பட்ச இருப்பு தொகை கட்டணம் கிடையாது

4. அனைத்து தொழில் நிதி வாடிக்கையாளர்களுக்கும் டிஜிட்டல் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு குறைக்கப்பட்ட வங்கி கட்டணங்கள்

 

பெரு நிறுவன விவகாரங்கள்

 

1 ஏப்ரல் 1 முதல் 30 செப்டம்பர் 2020 வரையிலான காலத்தில் MCA 21 பதிவு தொடர்பாக‌ தாமதமாக விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. இது நிறுவனங்களின் சுமையை குறைப்பதோடு மட்டுமில்லாமல், நீண்ட நாட்களாக தாக்கல் செய்யாத நிறுவனங்களின் 'புதிய தொடக்கத்துக்கு' வழி வகுக்கும்.

2. அடுத்த 2 காலாண்டுகளுக்கு, அதாவது 30 செப்டம்பர் வரை, நிறுவன நிர்வாக கூட்டத்தை (போர்டு மீட்டிங்) கூட்டுவதற்கான நிறுவனங்கள் சட்டத்தின் காலக்கெடுவான 120 நாட்கள், 60 நாட்கள் வரை நீட்டிக்கப்படும்.

3. தணிக்கையாளர் அறிக்கை விதி 2020, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியாண்டு 2019-20க்கு பதிலாக, 2020-21ல் இருந்து அமலுக்கு வரும். இது நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தணிக்கையாளர்களின் சுமையை பெருமளவுக்கு குறைக்கும்.

4. நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 4ன் படி, சுயசார்பான‌ இயக்குனர்கள் கூட்டம் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது நிர்வாக உறுப்பினர்கள் இன்றி நடக்கவேண்டும். 2019-20 ஆண்டுக்கான சுயசார்பான‌ இயக்குனர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்றால் அது விதி மீறலாக கருதப்படாது.

5. நிதி ஆண்டு 2020-21ல் முதிர்ச்சி அடையும் வைப்புத் தொகைகளுக்கான வைப்பு இருப்பு தொகை 20% என்பது 30 ஏப்ரல் 2020க்கு பதில் 30 ஜூன் 2020க்குள் உருவாக்கிக் கொள்ளலாம்.

6. குறிப்பிட்ட திட்டங்களில் 15% கடன் பத்திரங்க‌ளை முதலீடு செய்வது 30 ஏப்ரல் 2020க்கு பதில் 30 ஜூன் 2020க்குள் செய்யலாம்.

7. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் பதிவு செய்த 6 மாதங்களுக்குள் தங்கள் வர்த்தகத்தை தொடங்க வேண்டும். இதற்கு கூடுதலாக ஆறு மாதங்கள் கெடு வழங்கப்படும்.

8. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்த பட்சம் ஒரு இயக்குனராவது குறைந்தது 182 நாட்களாவது இந்தியாவில் வசிக்க வேண்டும் என்னும் நிறுவனங்கள் சட்டத்தின் 149 பிரிவு கடைபிடிக்கப்படவில்லை என்றால் அது விதிமீறலாக கருதப்படாது.

9. கோவிட்-19 நோயின் தாக்கத்தால் உருவாகியுள்ள நிதி சிக்கல்களினால் பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, IBC 2016, செக்ஷன் 4ன் படி கடன் கட்டாமல் இருப்பதற்கான அளவு (டீஃபால்ட்) ரூ 1 லட்சத்தில் இருந்து ரூ 1 கோடியாக உயர்த்தப்படும். இது, நிறுவனங்களை திவால் நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றும். 30 ஏப்ரல், 2020க்கு பிறகும் இதே நிலைமை தொடர்ந்தால், IBC 2016ன் 7, 9 மற்றும் 10ம் பிரிவுகளை தற்காலிமாக நீக்குவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். இது, நிறுவனங்களை, கடன்கள் கட்டாத பட்சத்தில், திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் இருந்து காக்கும்.

 

10. இது தொடர்பான விரிவான அறிவிக்கைகள்/சுற்றறிக்கைகள் பெருநிறுவன விவாகரங்கள் அமைச்சகத்தால் தனியாக வெளியிடப்படும்.

மீன்வளத் துறை

1. மார்ச் 1, 2020ல் இருந்து ஏப்ரல் 15, 2020 வரை காலாவதியாகும் எஸ் பி எஃப் இறக்குமதி மற்றும் வேளாண்மை தொடர்பான அனைத்து சுகாதர ஒப்புதல்களும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

2. ஒரு மாதம் வரை சரக்குகள் வர தாமதமானால் ஏற்றுக்கொள்ளப்படும்.

3. சென்னையில் உள்ள கடல் சார்ந்த தனிமைப்படுத்தப்பட மையத்தில் ரத்து செய்யப்பட்ட சரக்குகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளை மறுபடி புக் செய்ய கூடுதல் கட்டணங்கள் இல்லை.

4. கோப்புகளை சரிபார்த்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்கான தடையில்லா சான்று வழங்குவதற்கான காலக்கெடு 7 நாட்களிலிருந்து 3 நாட்களுக்கு தளர்வு

வணிகங்கள் துறை

பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகளை பின்பற்றுவதற்கான காலக்கெடுக்கள் நீட்டிக்கப்படும். வணிக அமைச்சகம் இது தொடர்பான விரிவான அறிவிக்கைகளை வெளியிடும்.(Release ID: 1608358) Visitor Counter : 411