பிரதமர் அலுவலகம்

மருந்து உற்பத்தி தொழில் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடல்

கோவிட் - 19 பரிசோதனைக்கான ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உற்பத்தியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மருந்து உற்பத்தித் தொழில் துறையினருக்கு பிரதமர் வலியுறுத்தல்

வழங்கலை பராமரித்தல், ஏ.பி.ஐ.கள் மற்றும் உள்நாட்டிலேயே உற்பத்தியில் அரசு உறுதியாக உள்ளது: பிரதமர்

அத்தியாவசிய மருந்துகள் சப்ளையை பராமரித்தல் மற்றும் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுத்தல் முக்கியம்: பிரதமர்

Posted On: 21 MAR 2020 7:13PM by PIB Chennai

மருந்து உற்பத்தித் துறையின் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

கோவிட் - 19 நோயின் சவாலை முறியடிப்பதில் மருந்து உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் கூறினார். அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதை இந்தத் துறையினர் உறுதி செய்வதுடன், புதிய மற்றும் புதுமை சிந்தனை தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆக்டிவ் பார்மசூட்டிகல் உட்பொருட்கள் (.பி..) தொடர்ந்து கிடைக்கச் செய்வதில் இந்தத் துறைக்கு உதவுவதில் அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அந்த .பி..களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். முக்கியமான ரசாயன மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை உறுதி செய்வதற்கு, ரூ.10,000 கோடி மற்றும் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்தார்.

கோவிட் - 19க்கான ஆர்.என்.. பரிசோதனை உபகரணங்களை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தொழில் துறை தலைவர்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்பனை, மருந்துகள் பதுக்கலைத் தவிர்க்கவும், அத்தியாவசியப் பொருள்கள் சப்ளையை பராமரிப்பதை உறுதி செய்யவும் மருந்து விற்பனையாளர்களும், பார்மசிஸ்ட்களும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்சாத்தியமான பகுதிகளில், மொத்தமாக மருந்துகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சேவை தேவைப்படும் முக்கியமான இந்த காலகட்டத்தில், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். மருந்து உற்பத்தித் துறையில் ஆள் பற்றாக்குறை இல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர். மருந்து கடைகளில், சமூக இடைவெளியைப் பராமரிக்கும் விஷயத்தைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு அவர் யோசனை தெரிவித்தார். வைரஸ் பரவுதலைத் தடுக்க, டிஜிட்டல் பணப்பட்டுவாடா முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமரின் தலைமைத்துவத்திற்காக பார்மசூட்டிகல்ஸ் சங்கங்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனஅத்தியாவசிய மருந்துகள் மற்றும் சாதனங்களின் வழங்கலைப் பராமரிப்பதில் தாங்கள் உறுதியுடன் செயல்படுத்துவோம் என்றும், தடுப்பு மருந்துகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் சங்கங்கள் கூறின. பார்மா துறையில் அரசின் கொள்கை அறிவிப்புகள், இந்தத் துறைக்கு பெரும் ஊக்கம் தருபவையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மருந்து உற்பத்தித் தொழில் துறையினரின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அவர்கள் மன உறுதியுடன் உழைத்து வருவதற்கும் பிரதமர் பாராட்டு கூறினார். அவர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாக, அறிவியல்பூர்வமான தகவல்கள் மக்களைச் சென்றடையச் செய்வதில் இத் துறையினர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விமான நிலையம், துறைமுக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதில், அரசின் ஓய்வில்லா முயற்சிகளை பார்மசூட்டிகல்ஸ் துறை செயலாளர் எடுத்துரைத்தார். பார்மசூட்டிகல் சங்கத்திற்கு சுகாதாரத் துறை செயலாளர் நன்றி தெரவித்துக் கொண்டார். இதுவரை பற்றாக்குறை எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தனிப்பட்ட பாதுகாப்பு கவச உடை தயாரிப்பாளர் சங்கங்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றியும் அவர் பேசினார்.

கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை மத்திய இணை அமைச்சர், முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், சுகாதாரம், ஜவுளிகள், பார்மசூட்டிகல்ஸ் துறைகள், மத்திய அரசின்  செயலாளர்கள், இந்திய பார்மசூட்டிகல்ஸ் கூட்டமைப்பு, இந்திய ரசாயன மருந்து உற்பத்தியாளர் சங்கம், இந்திய பார்மசூட்டிகல்ஸ் உற்பத்தியாளர்கள் அமைப்பு, கெமிஸ்ட்கள் மற்றும் டிரக்கிஸ்ட்கள் அகில இந்திய அமைப்பு, ரோட்ரன்ட் பார்மசூட்டிகல்ஸ், ரசாயன மருந்து மொத்த உற்பத்தியாளர் சங்கம் மற்றும் மருத்துவ உபகரண தொழிற்சாலைகள் சங்கங்கள் உள்ளிட்ட பார்மசூட்டிகல் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

*******



(Release ID: 1607770) Visitor Counter : 248