பிரதமர் அலுவலகம்

ஞாயிறன்று நடைபெறவுள்ள மக்கள் ஊரடங்கை ஆதரிக்கும் பல்வேறு தரப்பினருக்கும் பிரதமர் நன்றி

Posted On: 20 MAR 2020 8:53PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஞாயிறன்று நடைபெறவுள்ள மக்கள் ஊரடங்குக்கு ஒன்று சேர்ந்து ஆதரவளிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

 

        மக்கள் ஊரடங்குக்கு  பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடே ஒன்று சேர்ந்து         இதனைச் சிறந்த முறையில்  நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

நாம் எப்போதும் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும், அச்சமடையாமலும் முன்னேறுவோம்.

மக்கள் ஊரடங்கை  வெற்றிப் பெறச் செய்வோம். மக்கள் ஊரடங்கை ஆதரிக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

https://t.co/yufi4KbUW0https://t.co/PVN40Mlqmyhttps://t.co/WGc3uueP8Nhttps://t.co/MPtYVFm90S
-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

ஒரு பொதுவான காரணத்துக்காக செல்வாக்கு மிக்க குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும்போது, நாம் அதைச் செயல்படுத்திவிடலாம் என்பதை அறிகிறோம்.

#IndiaFightsCorona https://t.co/F2j8jevAxFhttps://t.co/pXHz8UpIgwhttps://t.co/qpRHhlMRvM

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

 

இத்தகைய முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு ஆதரவும் கிடைப்பது பாராட்டுக்குரியது. இந்தத் தொற்றை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

#IndiaFightsCorona https://t.co/CM8fItFLqqhttps://t.co/FLz974ki21https://t.co/25Z3F360TY
-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

நாட்டின் மிகவும் புகழ்பெற்ற திரைப்படத்துறையினர் இதுபற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை  நமது இந்தியர்கள் கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

#IndiaFightsCorona
https://t.co/qh63PRaeqJhttps://t.co/Bo2NKzauL3https://t.co/og7caRvKL8

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

 

 

 

 

 

கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதில் முறையான அத்தியாவசியத் தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலமை் உங்களைப் போன்ற மூத்த  ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில்  பங்கேற்பதைக் காண்பதில் மகிழ்ச்சி.

#IndiaFightsCoronahttps://t.co/dIje3hLeTShttps://t.co/A9cqMR2wgJ

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

 

கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு விஷயங்கள் பற்றி அதில் நிபுணர்கள் பேசுவதை நாம் கவனிப்பதே நல்லது.

#IndiaFightsCorona https://t.co/yT7wGMLshChttps://t.co/yGlexNveMAhttps://t.co/TD3cB6KeYs

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

பல்வேறு விளையாட்டுக்களில் சாதனைப் புரிந்தவர்களும் தடகள வீரர்களும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் குறித்த விழிப்புணர்வை எழுப்பி வருகின்றனர். அதனை இதயத்தில் உள்வாங்கி கொரோனாவை விரட்டியடிப்போம்.

#IndiaFightsCoronahttps://t.co/kBwZoDJ9bQhttps://t.co/e6WWEwygTJhttps://t.co/AKsTUrWYGihttps://t.co/z5WuAtQHl7

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

 

 

 

நாட்டைப் பெருமிதம் கொள்ளச்செய்த பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மின்னல்வேக ஓட்டப்பந்தய வீரர்கள், கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றுசேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனை நாம் செயல்படுத்த வேண்டும்.

https://t.co/S6Bv8LwskIhttps://t.co/wkJxiQD46v

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

நெருக்கடியான நேரங்களில் நமது அணிகளை  வழிநடத்திய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நமக்காக சிலவற்றை கூறுகின்றனர்.  நாமும் கொரோனாவுக்கு எதிராக ஒன்று சேர்வோம்.

#IndiaFightsCoronahttps://t.co/vSZCibHvzzhttps://t.co/XPXNhJ0Rlxhttps://t.co/0a7JcT4IVVhttps://t.co/wEIFA6ZehQhttps://t.co/e63GDehTOg

-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.

 

 

 

 

 

 

 

 

 

 


(Release ID: 1607465)