பிரதமர் அலுவலகம்

கோவிட்19-ஆல் எழுந்துள்ள நிலைமையை அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்

வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல மாட்டார்கள்

Posted On: 12 MAR 2020 5:41PM by PIB Chennai

நோவல் கொரோனாவைரஸ் கோவிட்19-ஆல் எழுந்துள்ள நிலைமையை அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

     பிரதமர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் மாநில அரசுகள், மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

     மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும், அவசியமற்ற பயணங்களையும், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

     வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  

 

@narendramodi

நோவல் கொரோனாவைரஸ் கோவிட்19-ஆல் எழுந்துள்ள நிலையை அரசு விழிப்புடன்  கண்காணிக்கிறது.

அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு துறைகள் & மாநிலங்கள்  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

விசா நிறுத்தம் முதல் சுகாதார வசதி வரை ஏராளமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

@narendramodi

அச்சமடைய வேண்டாம், முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.

வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல மாட்டார்கள். பொதுமக்களும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதைத் தவிர்ப்பதன் மூலம், தொடர்ச்சியாக நோய் பரவுவதை தடுத்து, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.

 

*****



(Release ID: 1606163) Visitor Counter : 144