பிரதமர் அலுவலகம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு பிரதமர் மரியாதை

Posted On: 08 MAR 2020 11:56AM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெண்களின் திறமையைப் போற்றுவதாக தெரிவித்துள்ளார்.

     “சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! நமது பெண்களின் திறமையைப் போற்றி, சாதனைகளுக்கு தலைவணங்குவோம். சில நாட்களுக்கு முன், நான் கூறியபடி, எனது சமூக ஊடகக் கணக்குகளை இன்று முழுவதற்கும் நான் இயக்கப்போவதில்லை. ஏழு பெண் சாதனையாளர்கள் தங்களது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொள்வதோடு, எனது சமூக ஊடகக் கணக்கு வாயிலாக உங்களுடன் கலந்துரையாடவுள்ளனர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், சாதனைபடைத்த தலைசிறந்த பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் மகத்தான சாதனை படைத்துள்ளனர். அவர்களது போராட்டங்களும், எதிர்பார்ப்புகளும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கும். அதுபோன்ற பெண்களின்  சாதனைகளை கொண்டாடுவதோடு, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம். #SheInspiresUs  @narendramodi மார்ச் 8, 2020

 

காஷ்மீரின் பாரம்பரிய கைத்தொழில்கள் அங்குள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடும் என்பதால், அவற்றுக்கு புத்துயிர் அளிப்பது குறித்து நான் சிந்தித்து வருகிறேன்.

பெண் கலைஞர்களின் நிலையை நான் பார்த்திருப்பதால், நம்தா கைத்தொழிலை மீண்டும் கொண்டுவருவதற்கான பணிகளை நான் தொடங்கியுள்ளேன்.

நான் காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃபா, இங்கு எனது வாழ்க்கைப் பயணத்தை அறிந்து கொள்ளலாம். #SheInspiresUs  @narendramodi மார்ச் 8, 2020

 

*****



(Release ID: 1605718) Visitor Counter : 179