மத்திய அமைச்சரவை
இந்தியா-கோட்டே டெல்வாயர் இடையிலான சுகாதாரத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
04 MAR 2020 4:12PM by PIB Chennai
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கும் கோட்டே டெல்வாயர் குடியரசின் சுகாதாரம் மற்றும் பொதுநல அமைச்சகத்துக்கும் இடையே சுகாதாரத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நவீன மருத்துவத் தொழில்நட்பத் துறையில், மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்கான பயிற்சி, மருந்துகள் கட்டுப்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மேம்பாடு, ஆரம்ப சுகாதாரத் துறையில் சிறந்த சிகிச்சை முறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த்தடுப்பு உள்பட 17 பிரிவுகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை மேற்பார்வையிடவும், மேலும் விரிவான ஒத்துழைப்புக்கும் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.
(Release ID: 1605212)
Visitor Counter : 141
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada