மத்திய அமைச்சரவை

அதிகாரம் கொண்ட “தொழில்நுட்பக் குழு” அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2020 4:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயரதிகாரம் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

விவரங்கள்

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரை தலைவராகக் கொண்ட 12 உறுப்பினர் தொழில்நுட்பக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப வரைவு மற்றும் தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்கள், தேசிய பரிசோதனைக் கூடங்கள், அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் உருவாக்கப்பட்ட இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குதல் குறித்த கொள்கை ஆலோசனைகளை உடனுக்குடன் அளிக்க  இந்தக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கான திட்டத்தை உள்நாட்டிலேயே உருவாக்குதல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவும் உரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தேர்வு செய்தல் பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும். 

முக்கிய விளைவுகள்

  1. தொழில்நுட்ப விநியோகஸ்தருக்கான தொழில்நுட்ப உருவாக்கம், தொழில்நுட்பக் கொள்முதல் உத்தி ஆகியவை குறித்து சிறந்த ஆலோசனைகளை தொழில்நுட்பக் குழு வழங்கும்.
  2. உருவெடுக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கை அம்சங்களின் நிபுணத்துவத்தை இது உருவாக்கும். 
  3. பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய பரிசோதனைக் கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட / உருவாக்கப்பட்டு வரும் நீடித்த பொதுத்துறை தொழில்நுட்பத்தை இந்தக் குழு உறுதி செய்யும்.

தொழில்நுட்பக் குழுவின் பணியில் மூன்று தூண்கள்:

  1. கொள்கை ஆதரவு
  2. கொள்முதல் ஆதரவு
  3. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்வடிவுகளுக்கான ஆதரவு

*************



(Release ID: 1603727) Visitor Counter : 243