மத்திய அமைச்சரவை

இந்தியா-ஐஸ்லாந்து இடையே நீடித்த மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 FEB 2020 3:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மீன்வளத் துறையில் இந்தியாவுக்கும், ஐஸ்லாந்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது.   இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019 செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

 

  1. கடலோர, ஆழ்கடல் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த மீன் வளத்தை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் பணியமர்த்தும் வகையில், விஞ்ஞானிகளையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் பரிமாறிக் கொள்வதற்கான வசதிகளை உருவாக்குதல்.

 

  1. நவீன மீன்பிடித்தல் மேலாண்மை, மீன் பதப்படுத்துதல் பிரிவில் பல்வேறு மேலாண்மை அம்சங்கள் குறித்து, மீன்வள நிபுணர்களுக்கு முக்கிய நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வசதி.

 

  1. அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் இதர தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.

 

  1. மீன்பிடித்தல் தொடர்பான படிப்புகளில் நிபுணர்களையும், நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ளுதல். தொழில் மேம்பாட்டுக்கான ஆழ்கடல் மீன்பிடித்தல் மூலம் கிடைக்கும் மீன்களைப் பதப்படுத்தி சந்தைப்படுத்துதல்.

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-ஐஸ்லாந்து இடையில் நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.   இருதரப்பு விஷயங்கள் குறித்த ஆலோசனை உட்பட மீன்வளத்துறையில் ஒத்துழைப்புக்கான ஆலோசனைகளையும் இது மேம்படுத்தும்.

*********



(Release ID: 1602954) Visitor Counter : 205