சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா வைரஸ்: திருத்தப்பட்ட பயண அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன
Posted On:
03 FEB 2020 10:24AM by PIB Chennai
ஏற்கனவே நேற்று பயண அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் திரு த்தியமைக்கப்பட்ட பயண அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், 2020 ஜனவரி 15-ஆம் தேதிமுதல் சீனாவுக்குப் பயணம் செய்தவர்களும், அண்மையில் பயணம் செய்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
- சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
- சீன நாட்டினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசா தற்காலிகமாக செல்லாது என அறிவிக்கப்படுகிறது.
- சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- கட்டாயமான காரணங்களால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டியவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அல்லது ஷாங்காய் அல்லது குவாங்ஷூ-வில் உள்ள துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
****
(Release ID: 1601679)
Visitor Counter : 178