நிதி அமைச்சகம்

நீர்வள ஆதாரத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 3.60 லட்சம் கோடி ஒதுக்கீடு


வரும் நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.12,300 கோடி ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2020 2:05PM by PIB Chennai

நாடுமுழுவதும் திறந்தவெளிக் கழிப்பிடங்களை அகற்றவும் இந்த திட்டத்தின்கீழ் எவர் ஒருவரும் விடுபடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கழிவுநீர் மேலாண்மை திட்டத்திற்கு அதிக அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திடக்கழிவினை சேகரிப்பதிலும் அவற்றை பிரித்தெடுப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தும் என்றார். வரும் நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.12,300 கோடி என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள நீர்வள ஆதாரத் திட்டத்திற்கு ரூ.3.60 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூர் நீர்வள ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  ஏற்கனவே, நடைமுறையில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும், தண்ணீர் சேகரிப்பை மேம்படுத்துவதுடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கும் இந்தத்  திட்ட நிதி பயன்படுத்தப்படும். 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற நடப்பாண்டிலேயே, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இத்திட்டத்திற்காக 2020-21ஆம் ஆண்டில் ரூ.11,500 கோடி வழங்கப்படும் என்றார்.

------



(Release ID: 1601526) Visitor Counter : 170